ரஷ்யா, வடகொரியாவின் ஆயுதங்களை பயன்படுத்தியமைக்கான ஆதாரங்களை வெளியிட்டது உக்ரைன்!
உக்ரைனில் நடத்தப்படும் தாக்குதல்களில் ரஷ்யா, வடகொரியா வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடகொரியா, ரஷ்யாவிற்கு தேவையான ஆயுதங்களை வழங்குவதாக பென்டகன் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும் அந்த குற்றச்சாட்டுக்களை ரஷ்யா நிராகரித்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ரஷ்யா, வடகொரியாவின் ஆயுதங்களை பயன்படுத்தியது என்பதற்கான மேலதிக ஆதாரங்களை உக்ரைன் வழக்குரைஞர்கள் வெளியிட்டுள்ளனர்.
வடகொரியா தனது படையெடுப்பின் போது முதன்முறையாக வழங்கிய ஏவுகணைகளால் ரஷ்யா இந்த வாரம் உக்ரைனை தாக்கியதாக வொலோடிமிர் செலனஸ்கியின் மூத்த ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
"உற்பத்தி முறை மிகவும் நவீனமானது அல்ல. தரமான இஸ்கந்தர் ஏவுகணைகளில் இருந்து விலகல்கள் உள்ளன, என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணையானது ரஷ்ய இஸ்கந்தர் ஏவுகணையை விட விட்டத்தில் சற்று பெரியது என்றும், அதன் முனை, உள் மின் முறுக்குகள் மற்றும் பின் பாகங்களும் வித்தியாசமானவை என்றும் அவர் கூறினார்.