ஜனாதிபதி தேர்தல் : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் எழுந்துள்ள போட்டி!
#India
#SriLanka
#Mahinda Rajapaksa
#Namal Rajapaksha
#SLPP
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Sri LankaElection
Thamilini
2 years ago
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்படவுள்ள ஆறு பேர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசில் ராஜபக்ஷவுக்கு மேலதிகமாக, நாமல் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்தன, ஊடக நிறுவன உரிமையாளர் தம்மிக்க பெரேரா மற்றும் மற்றுமொரு விசேட நபர் ஆகியோரும் ஜனாதிபதி வேட்புமனுவை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், அது தொடர்பில் கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக கலந்துரையாடவில்லை என்பதுடன், ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் நேரத்தில் தீர்மானம் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவே இது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளார்.