இலங்கை தொடர்பில் ஜப்பான் விடுத்துள்ள வலியுறுத்தல்!
#SriLanka
#Lanka4
#Japan
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
கடந்த ஆண்டு இறுதியில் கொள்கையளவில் உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கைக்கும் கடன் வழங்கும் நாடுகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) விரைவில் கைச்சாத்திடப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜப்பான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
அதிகாரபூர்வ கடனாளர் குழுவிற்கு (OCC) வெளியே கடன் வழங்குபவர்களுடனான ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீட்டுத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.