இலங்கையின் நிலை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜுலி சங்!

#SriLanka #Lanka4 #economy #Tamilnews #sri lanka tamil news #julie chung
Thamilini
2 years ago
இலங்கையின் நிலை குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜுலி சங்!

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை, சமாதானம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்க்கை என்பன தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  ஜூலி சாங் தெரிவித்துள்ளார். 

நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷவுடன் இன்று (08.01) காலை நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் ஜூலி சாங் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

இதன்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலங்கள் தொடர்பில் நீதி அமைச்சருக்கும் தூதுவருக்கும் இடையில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

நீரியல் சேவையை ஸ்தாபித்தல், நீரியல் அளவீடுகளை முறைப்படுத்துதல், கடல்சார் உருவாக்கம் போன்ற கடற்படை மற்றும் கடல்சார் நடவடிக்கைகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட நீரியல் சட்டமூலத்தின் புதிய வரைவு குறித்தும் அமைச்சருடன் தூதுவர் கலந்துரையாடியதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!