அகில இலங்கை சமாதான நீதவானாக சறபுல் அனாம் முஹம்மது அமியாஸ் சத்தியபிரமாணம்!
#SriLanka
#Mannar
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
மன்னார் மூர் வீதியைச் சேர்ந்த சறபுல் அனாம் முஹம்மது அமியாஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக நேற்று (10.11) மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஏ.எஸ்.எம் அமியாஸ் மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதுடன் இலங்கை புகையிரத திணைக்களத்தின் கிளிநொச்சி புகையிரத நிலைய அதிபராக செயற்பட்டு வருகின்றார்.
மேலும் மன்னார் மூர்வீதி கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருவதோடு, பல்வேறு சமூக செயற் பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.