ஈரான் வன்முறை - 6000ஐ தாண்டிய உயிரிழந்தோர் எண்ணிக்கை
#Death
#Protest
#people
#government
#Iran
Prasu
1 hour ago
ஈரானில், பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது.
வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த இணைய சேவையை அரசாங்கம் துண்டித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6,126 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம்.
இயல்பு நிலை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
(வீடியோ இங்கே )