யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு அருகில் சடலம் மீட்பு!
#SriLanka
#Jaffna
#Death
#Police
#Investigation
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
யாழ்ப்பாணம் - நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
ஜெகநாதன் என்ற 61 வயதானவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழப்பு இடம்பெற்று சில தினங்களாகி இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலையா தற்கொலையா என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்தனர்.