அஸ்வெசும கொடுப்பனவு மற்றும் முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!
அஸ்வேசும திட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கு தகுதி பெற்ற பயனாளிகளுக்கான ஜனவரி மாத உதவித்தொகையும், இரண்டு கட்டங்களின் கீழும் பொருந்தக்கூடிய ஜனவரி மாத முதியோர் உதவித்தொகையும் நாளை (28) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திட்டத்தின் முதல் கட்டமாக, மொத்தம் 11.23 பில்லியன் ரூபாய் வைப்பிலிடப்படும்.
முதல் கட்டத்திற்கான ஜனவரி மாத மூத்த குடிமக்கள் உதவித்தொகை 618,440 பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்காக 3 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அஸ்வேசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்காக, ஜனவரி மாத உதவித்தொகை 248,454 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும்.
இரண்டாம் கட்டத்திற்கான ஜனவரி மாத மூத்த குடிமக்கள் உதவித்தொகை 68,183 பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் உதவிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்