எரிவாயு சிலிண்டர் வெடித்து இலங்கை பணிப்பெண் மரணம்

#SriLanka #Death #Women #Blast #SaudiArabia #Gas #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
எரிவாயு சிலிண்டர் வெடித்து இலங்கை பணிப்பெண் மரணம்

ஆறு மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற மெதிரிகிரிய திவுலன்கடலைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் குறித்த வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மெதிரிகிரிய திவுலன்கடலைச் சேர்ந்த பி. தில்மி மதுபாஷினி குமாரி 26 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தின் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட இந்த பெண் வீட்டு வேலை செய்யச் சென்றார்.

 இந்தப் பெண் சவூதி சென்ற நாளிலிருந்து வாரம் ஒருமுறை அல்லது இருமுறை தொலைபேசியில் கணவருடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும் குறித்த வீட்டில் தனக்கு வேலைகள் அதிகம் என்றும் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!