சீனாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் நடைபெறும் தைவான் ஜனாதிபதி தேர்தல்!

#SriLanka #China #Election #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
10 months ago
சீனாவின் அழுத்தங்களுக்கு மத்தியில் நடைபெறும் தைவான் ஜனாதிபதி தேர்தல்!

தைவானில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (13.01) நடைபெறவுள்ளது. 

இவ்வருடம் நடைபெறுகின்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சீனாவின் நெருக்கடிகள் அதிகரித்துள்ள இந்த சமையத்தில் எதிர்கால நகர்வுகள் முக்கியத்துவம் பெருகின்றன. 

சீனா, தைவானை தனது ஒருங்கிணைந்த பகுதியாக கருதுகிறது. இருப்பினும் தைவான் தன்னை தனிநாடாக அங்கீகரித்து கொண்டுள்ளது. இந்நிலையில் எவ்வழியிலேனும் தைவானை கைப்பற்றுவோம் என சீனா தொடர்ந்து முழக்கமிட்டு வருகிறது. 

இதன்காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் பனிப்போர் நீட்டித்து வருகிறது. இதற்கிடையில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளதால் தைவான் ஜலசந்தி பகுதியில் பதற்றநிலை நீட்டித்துவருகிறது. 

இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று ஏறக்குறைய 08 வருடங்கள் கடந்துள்ளன. மோதல் போக்கை தீர்க்க பேச்சுவார்த்தைகள் தான் ஒரே வழியென்றாலும், அதற்கு இருநாடுகள் தரப்பில் இருந்து எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. 

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த தைவான் ஜனாதிபதி வேட்பாளரான வில்லியம் லாய் தெரிவித்திருந்தார். அதேவேளை தைவான் தன்னுடைய பாதுகாக்கும் திறனை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த விடயங்கள் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளதுடன், இவ்வருடம் தேர்ந்தெடுக்கப்படும் ஜனாதிபதி தைவானின் எதிர்காலத்தில் முக்கிய பங்குவகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!