செங்கடலிற்கு செல்லும் இலங்கையின் கப்பல்! மேற்காசிய நாடுகள் கடும் அதிருப்தி
#SriLanka
#Asia
#Lanka4
#Ambassador
#Ship
#RedSea
Mayoorikka
2 years ago
செங்கடலிற்கு கப்பலை அனுப்பும் இலங்கையின் தீர்மானம் தொடர்பில் மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்ற பணிகளில் இலங்கையர்களை இஸ்ரேல் வேலைக்கு அமர்த்துவதற்கு அனுமதிக்கவேண்டாம் எனவும் மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சமீபத்தில் சந்தித்தவேளை மேற்காசிய நாடுகளின் தூதுவர்கள் செங்கடலிற்கு கப்பலை அனுப்பும் தீர்மானம் குறித்து வெளிப்படையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேலுடனான பாதுகாப்பு உடன்படிக்கைகளின் அடிப்படையிலேயே அமெரிக்காவும் பிரிட்டனும் செங்கடலில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன ஏனைய நாடுகள் அவ்வாறு செயற்படவில்லை என மேற்காசியநாடுகளின் தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.