சர்வதேச ரீதியில் இலங்கை அவமானப்படுத்தப்பட்டுள்ளது - அனுர குமார திஸாநாயக்க!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#AnuraKumaraDissanayake
#lanka4Media
Thamilini
2 years ago
சர்வதேச ரீதியில் இலங்கை அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
தற்போதைய ஆட்சியாளர்களின் பலவீனங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மக்களின் கருத்தை தெரிவிக்கும் வகையில் கூடிய விரைவில் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டுமென வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடத்தில் நிச்சயம் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.