கழுத்து இறுகி உயிரிழந்த ஒன்பது வயது சிறுவன்

#SriLanka #Death #Hospital #children #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
கழுத்து  இறுகி உயிரிழந்த ஒன்பது வயது சிறுவன்

கலவான பொதுப்பிட்டிய, பனாபொல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், இறப்பர் பட்டி கழுத்து இறுக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

பனாபொல கங்கனமல பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயதுடைய ககனா என்ற சிறுவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவன் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்தச் சிறுவன் தனது வீட்டில் இறப்பர் பட்டி ஒன்றை இரும்பு ஒன்றில் கட்டி சுழற்றியதாகவும், பின்னர் அந்த இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக பொத்துப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!