தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த பேருந்து!
#SriLanka
#Bus
#Lanka4
#fire
#Tamilnews
#sri lanka tamil news
#lanka4Media
Thamilini
2 years ago
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலியத்த மாற்றுப்பாதைக்கு அருகில் இந்த பேருந்து திடீரென தீப்பிடித்துள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், பேருந்து தீப்பிடித்ததையடுத்து, பயணிகள் அனைவரும் அதிலிருந்து வெளியேறியதுடன், தீயினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
எனினும், தீ விபத்தால் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.