வட் வரி குறித்து ஐ.எம்.எஃப் பிரதிநிதிகளுடன் சஜித் கலந்துரையாடல்!

#SriLanka #Sajith Premadasa #Lanka4 #IMF #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வட் வரி குறித்து ஐ.எம்.எஃப் பிரதிநிதிகளுடன் சஜித் கலந்துரையாடல்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இது தொடர்பான சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்  பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளை எனக்கூறி தற்போதைய அரசாங்கம் VAT உட்பட பல வகை வரிகளை விதித்து மக்களுக்கு அதீத வரிச்சுமைகளை விதித்துள்ளதாக  எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் பொது மக்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள், நடுத்தர வர்க்கம், அரச ஊழியர்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்கள் அநாதரவாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர்   சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!