யாழில் முதன்முறையாக ரோன் கமரா மூலம் சோதனை நடவடிக்கை! சிக்கிய வீடுகளுக்கு எச்சரிக்கை
#SriLanka
#Jaffna
#Lanka4
#Dengue
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விசேட டெங்கு ஒழிப்பு வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
முதன் முறையாக ரோன் கமரா மூலம் உயரமான கட்டடங்கள், வீடுகளின் கூரைப்பகுதிகளில் நீர் தேங்கும் இடங்கள் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையில் வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு பல வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
(பிரத்தியேக செய்தி)

