யாழ்ப்பாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 18 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
#SriLanka
#Jaffna
#Switzerland
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
சுவிஸ் லுட்சேர்ன் மாநிலத்தில் றூத் கிராமத்தில் வாழ்ந்துவரும் திருமதி கமலேந்திரன் குடும்பத்தினரின் புதல்வி சாருஜாவின் 18 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்மாவட்டம் - குருநகரில் அமைந்துள்ள சென். ஜேம்ஸ் மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும் 18 வரிய மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறித்த உதவிப் பொருட்கள் துர்க்கை அறக்கட்டளையின் ஊடாக அம் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இவ்வுதவியினை மேற்கொண்ட திருமதி கமலேந்திரன் குடும்பத்தினருக்கு அம் மாணவர்கள் சார்பாகவும் துர்க்கை அறக்கட்டளையின் சார்பாகவும் மனம் நிறைந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.


