தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ள புதிய இந்திய உயர்ஸ்தானிகர்!
#India
#SriLanka
#Colombo
#Meeting
#Lanka4
#Ambassador
Mayoorikka
2 years ago
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை (22) மாலை 4மணிக்கு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
சந்தோஷ் ஜா இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தரப்புடன் நடைபெறுகின்ற முதலாவது சந்திப்பு இதுவென்பதும் தமிழரசுக்கட்சியின் தலைவராக சிறீதரன் பதவியேற்றுக்கொண்டதன் பின்னர் அவர் பங்கேற்கப்போகும் முதலாவது இராஜதந்திர சந்திப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.