ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைத் தமிழக கோயில்களில் திரையிட காவல்துறையினர் தடை

#India #Lanka4 #Tamilnews #lanka4Media #lanka4_news
Lanka4
10 months ago
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைத் தமிழக கோயில்களில் திரையிட காவல்துறையினர் தடை

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைத் தமிழக கோயில்களில் எல்ஈடிகள் வைத்துத் திரையிட காவல்துறையினர் தடை. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் பொருத்தப்பட்ட எல்இடி திரையை அனுமதி இல்லாமல் வைத்ததாக கூறி காவல்துறையினர் அகற்றம் 


அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் எல் இ டி திரைகள் பொருத்தப்பட்டது. பொதுமக்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர்ந்து ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காமாட்சி அம்மன் ஆலயத்தில் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட எல்இடி துறையை காவல்துறையினர், "அனுமதி பெறாமல் வைக்கப்பட்டது" என கூறி அதை அகற்றி வருகின்றனர் . இதனால் அங்கு சற்று பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 400 இடங்களில் பொதுமக்கள் ராமர் கும்பாபிஷேகத்தை கண்டு களிக்க எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளது. அதை காவல்துறையினர் அனுமதி இல்லை எனக்கூறி அகற்றி வருகின்றனர். இது இந்து விரோத போக்கை காண்பிக்கின்றது என பதிவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!