உக்ரைன் எல்லையில் விபத்துக்குள்ளான ரஷ்யாவின் போர் விமானம்!
#SriLanka
#Accident
#War
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Russia Ukraine
Thamilini
2 years ago
உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு பெல்கொரோட் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதாகவும், அப்போது விமானத்தில் 65 போர் கைதிகள் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
அந்த விமானத்தில் உக்ரைன் போர்க் கைதிகள் குழு இருந்ததாக பிபிசி தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.