பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் : முதலாவது சந்தேகநபர் கைது!
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பெலியத்தையில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றத்திற்கு தலைமை தாங்கிய சமன் குமார என்ற 54 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றத்திற்காக வந்த 65-2615 இலக்க ஜீப் வண்டியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர் குற்றம் நடந்த போது வாகனத்தை ஓட்டியவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், அவர் இந்த குற்றத்தை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.