சனத் நிஷாந்தவின் திடீர் மரணம் - வெற்றிடத்தை நிரப்பவுள்ள புதியவர்!
#SriLanka
#Death
#Parliament
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
2 years ago
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
அதற்கமைய, ஜாதிக நிதஹஸ் பெரமுனவை சேர்ந்த ஜகத் பிரியங்கர அந்த பதவியில் நியமிக்கப்படவுள்ளார் என அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜகத் பிரியங்கர, விமல் வீரவங்ச தலைமையிலான ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் மாவட்டத் தலைவராக செயற்படுகின்றார்.
ஜகத் பிரியங்கர தனது கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருப்பதால், அரசாங்கம் ஒரு ஆசனத்தை இழக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.