குடுவெல்ல மொதரவத்த கடலில் நீராடச் சென்ற மூவரில் ஒருவர் மாயம்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#Missing
Thamilini
2 years ago
குடுவெல்ல மொதரவத்த கடலில் நீராடச் சென்ற மூவர் இன்று (25.01) பிற்பகல் 2.30 மணியளவில் அலையில் சிக்கினர்.
ஒருவர் உயிர் பிழைத்த நிலையில் மற்றொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் களுத்துறையைச் சேர்ந்த 35 வயதுடைய சம்பத் குமார என்பவராவார்.
மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவர் 25 வயதுடைய உதார புஷ்பகுமார என்ற கம்புருபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கடற்பகுதிக்கு 05 பேர் கொண்ட குழுவினர் சென்றதாகவும், அதில் மூவர் நீராடச் சென்று மாயமாகியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.