நடிகர் விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஷால்

#India #Tamil Nadu #Actor #parties
நடிகர் விஜயைத் தொடர்ந்து அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர் விஷால்

நடிகர் விஜயை தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்குகிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லி அவர் கடந்த வெள்ளிக்கிழமை தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.

 அவர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த நிலையில் நடிகர் டிகர் விஷாலும் கட்சி தொடங்க தயாராகி உள்ளார்.

 ஏற்கனவே அரசியல் பணிகளில் விஷால் தொடர்ந்து விஷால் ஆர்வம் காட்டி வருகிறார். சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால் அவரது வேட்பு மனு தள்ளு படி ஆகிவிட்டது. தனது ரசிகர் மன்றத்தை விஷால் மக்கள் நல இயக்கம்’ என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார்.

images/content-image/1707294753.jpg

பூத் கமிட்டிகளையும் உருவாக்கி இருக்கிறார். வெளியூர்களில் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள ரசிகர்களை சந்திப்பதையும், கிராம மக்களிடம் குறைகள் கேட்டு கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார்.

 தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்து இருக்கிறார். இந்நிலையில் இதற்கான முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது. மேலும் சட்டமன்ற தேர்தலில் விஷால் கட்சி போட்டியிடும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!