கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகல்!
#SriLanka
#Gotabaya Rajapaksa
#Sri Lanka President
Mayoorikka
11 months ago
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார, தனது இராஜினாமா கடிதத்தை முன்னாள் ஜனாதிபதிக்கு இன்று செவ்வாய்க்கிழமை (20) அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில், தன்னை முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளராக வைத்திருந்தமைக்கு முதலில் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன், அரசியல் ஈடுபடுவதற்காகவே தனது பதவியை இராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உள்ளிட்டோரால் உருவாக்கப்பட்டுள்ள புதிய கூட்டணியில் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காகவே தான் பதவி விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.