கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவியை எதிர்கட்சிக்கு வழங்குமாறு கோரிக்கை!
#SriLanka
#Parliament
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
10 months ago
கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் எம்.பி லக்ஷ்மன் கிரியெல்ல பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தின் இன்றைய (22.02) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், போராட்டத்தின் போது சபாநாயகர் எதிர்க்கட்சிகளுக்கு இந்த பதவிகளை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இதுதொடர்பான நிலைமையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்தார்