இலங்கையில் தேடப்பட்டு வந்த 13 சந்தேகநபர்கள் துபாயில் கைது!
#SriLanka
#Police
#Crime
Mayoorikka
1 year ago

இலங்கையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 சந்தேகநபர்கள் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸாருடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்தார்.
குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருவதாக அவர் கூறினார்.
நாடட்டில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், கடத்தல்கள், கொலைகள் என்பவற்றுக்கு டுபாயிலிருந்துதான் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



