சாலை விபத்தில் யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர் பலி

#SriLanka #Jaffna #Death #Student #Accident #University
Prasu
2 months ago
சாலை விபத்தில் யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர் பலி

யாழ்ப்பாணம் - நீா்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ் பல்கலைகழக 1ம் வருட கலைப்பிரிவு மாணவா் ஒருவா் உயிாிழந்தார்.

மானிப்பாய் - பேம்படி பகுதியை சேர்ந்த 22 வயதான ரமேஷ் சகீந்தன் என்ற மாணவனே விபத்தில் மரணித்தார்.

தனது வீட்டிலிருந்து நீா்வேலி நோக்கி மோட்டாா் சைக்கிளில் பயணித்தபோது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்தார்.

 சம்பவம் தொடா்பாக கோப்பாய் பொலிஸாா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.