கிளிநொச்சியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி!

#SriLanka #Kilinochchi #vehicle
Mayoorikka
2 months ago
கிளிநொச்சியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி!

முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் நடைபெற்றது. 

 கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

 இதன்போது, முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கரிற்காக 400 ரூபாவும், மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணமாக 250 ரூபாய் கட்டணமாக அளவிடப்பட்டு இவர்களுக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

 குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவும், வீதி விபத்துக்கள் மற்றும் குற்ற செயல்களை இலகுவாக இனம் காண்பதற்காகவும் ஒட்டப்படுவதாகவும், குற்ற செயல்களை இலகுவாக அடையாளம் காண்பதற்கு இது ஏதுவாக அமையும் எனவும், இதனால் பாரிய அளவிலான குற்றச் செயல்கள் மற்றும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.