கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து வைக்கும் வடக்கு கல்வி பணிப்பாளர் - அம்பலப்படுத்தும் பெண் அதிகாரி

#SriLanka #NorthernProvince #education
Mayoorikka
10 months ago
கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்து வைக்கும் வடக்கு கல்வி பணிப்பாளர் - அம்பலப்படுத்தும் பெண் அதிகாரி

இடமாற்றம் தொடர்பில் தான் சொன்னால் வடமாகாண கல்விப் பணிப்பாளர் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து வைக்கும் நபர் என வட மாகாண கல்வி திணைக்கள பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 தற்போதைய இடமாற்றத்தில் 7 வருடங்களைக் கடந்தவர்களும் இடமாற்றத்தில் உள்வாங்கப் படாமல் இருக்கின்றமையை தான் கண்டுபிடித்து பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியாகவும் என்னை வேண்டுமென்றால் இடமாற்றம் செய்யுங்கள் என தான் நேரடியாக பணிப்பாளருக்கு கூறியுள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

 கடமை என்றால் அதை நேர்மையாகவும் துணிவுடனும் செய்வேன் பொறுக்க முடியாது என்றால் இடமாற்றம் செய்யுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

 வட மாகாண கல்வி அமைச்சின் வருடாந்த இடமாற்றத்தில் பரபட்சங்கள் மற்றும் முறைகேடுகள் இடம்பெறுவதாக ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் குறித்த பெண் அதிகாரியின் வீடியோ காணொலி வெளியாகியுள்ளது.

 வடக்கு கல்விப் பணிப்பாளர் ஏற்கனவே கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் ஒருவருக்கு எதிராக ஆசியர் சங்கததை தூண்டி விட்டு தனது பதவியை தக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டமை போராட்டத்தின் பின் தெரியவந்தது.

 அது மட்டுமல்லாது இவர் ஏற்கனவே கடமையாற்றிய முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி வலயங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையாத நிலையில் அது தொடர்பில் சில வலயக்கல்விப் பணிப்பாளர்கள் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 வட மாகாண கல்விப் பணிப்பாளரின் குயின்ரேஸ் தொடர்பில் வட மாகாண ஆளுநர் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது ஆசிரியர் சங்கங்களின் சில உயர்மட்ட உறுப்பினர்களும் வட மாகாண கல்வி பணிப்பாளரோடு நல்ல உறவைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது.

 வடமராட்சியார் எவரையும் கல்விப் பணிப்பாளருகாகு பிடிக்காது என்றும் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!