ஆண்களின் தன்னம்பிக்கைக்குரியது அவர்களது தாடியேயாகும்.
ஆண்கள் முகத்தில் வளரும் தாடியை தற்காலத்தில் அழகிற்கேற்ப பல விதங்களில் வடிவமைத்துக்கொள்கிறார்கள். முற்றிலுமாக தாடியை சவரம் செய்துவிட்டால் சருமம் வறட்சியடையும்.
ஆண்கள் தாடி வளர்த்தால் இயற்கையாக வரும் எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம். தாடி வளர்க்கும் ஆண்கள் ஏன் தாடி வளர்க்கின்றனர்? அழகுக்காகவா? என்ன காரணமாக இருக்கும்? சில ஆண்கள் சவரம் செய்ய சிரமப்படாமல் அப்படியே விட்டு விடுவதும் உண்டு. பெரும்பாலான ஆண்கள் சருமத்தை பராமரிக்க மாட்டார்கள்.
அதனால் அவர்களுடைய தாடிதான் பாதுகாவலன். தூசி அழுக்கு புகை என அனைத்திலிருந்தும் சருமத்தை தாடி பாதுகாக்கின்றது. கருமையைத் தடுக்கும். தாடிதான் வெளியில் அலைந்து திரியும் ஆண்களுக்கான பாதுகாப்பு. வெப்பத்தில் இருந்து சருமம் கறுமையாவதை தாடி தடுக்கின்றது.
பெண்கள் முகத்தை பாதுகாக்க துணி கட்டிக் கொள்கிறார்கள். அதற்கு பதில் ஆண்கள் இயற்கையாகவே தாடி வளர்த்து பாதுகாக்கிறார்கள் அவ்வளவுதான்.
அலர்ஜி ஆஸ்துமாவைக் குறைக்கும்
காற்றில் பரவுகின்ற கிருமிகளிடம் இருந்து முகத்தை பாதுகாப்பதும் தாடிதான். மேலும் சுத்தமாக இருக்க தாடியை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.
பருக்களை மறைக்கும் :
பருக்கள் அதிகமாக இருக்கும் ஆண்களுக்கு எண்ணெய் சுரப்பது அதிகமாக இருக்கும். இந்நிலையில் அந்த பருக்களையும் மறைத்து மேன்லியான தோற்றத்தை இந்த தாடி தரும். மேலும் பருக்கள் வரக்கூடிய கிருமித் தொற்றுகளையும் தாடி தடுக்கும்.
ஈரப்பதத்தை தக்க வைக்கும் :
முற்றிலுமாக தாடியை சவரம் செய்துவிட்டால் சருமம் வறட்சியடையும். ஆண்கள் தாடி வளர்த்தால் இயற்கையாக வரும் எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளலாம்.
தன்னம்பிக்கையை அதிகரிக்கும் :
ஆண்கள் தாடி வளர்ப்பதால் அவர்களை முதிர்ச்சியானவர்களாக காட்டுவதோடு அழகான தோற்றத்தையும் தரும். இது அவர்களுக்கு மேலும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும்.