ஆண்கள் மத்தியில் பெண்கள் விட்டுக்கொடுப்புடன் நடத்தல் உளரீதியாக சாலச்சிறந்தது

#Health #Women
Mugunthan Mugunthan
4 months ago
ஆண்கள் மத்தியில் பெண்கள் விட்டுக்கொடுப்புடன் நடத்தல் உளரீதியாக சாலச்சிறந்தது

ஆண்கள் இயல்பாகவே மனைவி மீது மிகுந்த பொசெசிவ். தன் முன்னாள் காதலன் பற்றி சொல்ல கூடாது அல்லது காதல் வாழ்க்கை பற்றி சொல்ல கூடாது.

 ஆணுக்கு ஆண் இது வேறு படும்....அப்படி தெரிந்து கூட ரொம்ப மெடூரெட்(Matured) மன சாந்தி மனோ உன்னதம் உள்ள ஆண்கள் அதை சரியான வழியில் எடுத்து கொள்வார்கள். ஆனால்...என்றாவது நினைவில் இருக்கும் ......10 வருஷம் ஆனாலும் ஒரு நாள் சொல்லலாம்.

 ஆகையால் கணவனாக போகும் ஆண்களிடம் மறைத்து விடு, என்றும் சொல்லவில்லை நான் ஏனனில் நடுத்தர வர்க்கத்தில் வளர்ந்த நாம் எப்போதும் சுய கட்டுப்பாடு, அப்பாவின் மானம் மரியாதையோடு தான் மட்டுமே வளர்த்து இருப்போம் ஆகையால் இதை மிக பெரிய விஷயமா வீட்டுக்காரரிடம் சொல்ல தேவை இல்லை.

 அவருடைய நண்பர் அல்லது உறவினர் இவரை விட அதிக சம்பளம் வாங்குகிறார்....இப்படி சொல்லவே வேண்டாம். ஆணின் ஹார்மோன் என்னிக்குமே போட்டி சுபாவம் தான் எப்போதும் ...இது அவர்களுக்கு கொடிய வலி, கோபம், விரக்தி கொடுக்கும். 

அவர்கள் எப்படி நினைப்பார்கள் என்றால் தன் இனம் ஒரு சிங்கம் எல்லை வைத்து இருக்கும். அதன் இணை குழந்தைகள் தன்னை பெரியதாக நினைக்க எதிர் பார்க்கும்....ஆனால் தன் பெண் சிங்கம் அடுத்த எல்லையை பார்த்துவிட்டால் எவ்வளவு அசிங்கம் ?

 உங்களுக்கு எவ்வளவு மூளை, அறிவு அதிகம் இருந்தாலும் பெண்களே....கணவனிடம் கொஞ்சமாவது மக்காக நடியுங்கள். அடக்கி வாசியுங்கள். இது மிக மிக முக்கியம். ஆண் தன்னைவிட மிக தீவிர அறிவு உடைய பெண்களை தலைவியாக பார்ப்பார்கள்....மனைவியாக கொஞ்சம் ..கஷ்டமே. அடிப்படை போட்டி ஹோர்மோன் ....மற்றும் இதுவும் ரொம்ப மெடூரெட் மன உணர்வு நிலையில் நல்ல முதிர்ச்சி பெற்ற ஆண் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு பிறந்த வீட்டிலிருந்து வரும் அழைப்புகள், பிரச்சனைகளை முடிந்த வரையில் கணவன் காதுக்கு எடுத்து செல்ல தேவையே இல்லை!