சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவையான பன்னீர் கிரேவி : ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க!

#SriLanka #Cooking #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
சப்பாத்தி மற்றும் சாதத்துடன் சாப்பிட சுவையான பன்னீர் கிரேவி : ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க!

தேவையான பொருட்கள் 

200 கி பன்னீர், பெரிய வெங்காயம் , தக்காளி, 10 முந்திரி, 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 டீஸ்பூன் சோம்புத்தூள், வெண்ணெய் (தேவையான அளவு),  கசூரி மேத்தி டீஸ்பூன் தேவையான அளவு

செய்முறை 

முதலில் பன்னீரை துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு பன்னீர் துண்டுகளை சேர்த்து லேசாக பிரட்டி தனியாக துண்டுகளை வைத்துக் கொள்ளவும்.

 பின் அதே கடாயில் சிறிது வெண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். 

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, பின் தக்காளி, மிளகாய்த்தூள், சோம்பு தூள், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.

பின் இவை நன்கு வதங்கியதும் இதனுடன் முந்திரி சேர்த்து கலந்து அடுப்பை அணைத்து விடவும். பின் இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அதன்பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.  பின் பன்னீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். 

சிறிதளவு கசூரி மேத்தி சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து வடவும். அவ்வளவுதான் சுவையான ஹைதராபாத் பன்னீர் மசாலா தயார்.