ஸ்ட்ராபெர்ரி பழம் சாப்பிட்ட 8 வயது சிறுவன் மரணம்
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் ஸ்ட்ராபெர்ரி பழம் அதிகமாக சாப்பிட்ட சிறுவன் மரணமடைந்த விவகாரத்தில் பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த 8 வயது சிறுவன் பாடசாலையில் நிதி திரட்டும் பொருட்டு ஸ்ட்ராபெர்ரி பழங்களை அதிகமாக சாப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை தூக்கத்தில் இருந்த சிறுவனை எழுப்பிய பெற்றோருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்த அந்த பெற்றோர், சிறுவன் ஒவ்வாமை அறிகுறிகளை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவனுக்கு Benadryl அளித்துள்ளதாகவும், குளிக்க வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
எந்த மாற்றமும் தென்படாததுடன், நிலைமை மோசமடைய, இரவு 10.30 மணியளவில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். சில மணி நேரத்திற்கு பின்னர், வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையிலேயே வெள்ளிக்கிழமை பகல் பாடசாலைக்கு அனுப்பும் பொருட்டு தூக்கத்தில் இருந்த சிறுவனை பெற்றோர் எழுப்பியுள்ளனர்.
சிறுவன் எழும்பாத்தால் மருத்துவ உதவிக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களே சிறுவன் மரணமடைந்துள்ளதை உறுதி செய்துள்ளனர்.
இந்த நிலையில் வெளியான உடற்கூறு ஆய்வில், சிறுவன் ஒவ்வாமை காரணமாகவே மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது