கிளிநொச்சியில் டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் மனைவி படுகாயம்
#Accident
#Kilinochchi
#Hospital
#LANKA4
#family
#L4
Prasu
53 minutes ago
டிப்பர் மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று முற்பகல் கிளிநொச்சியில் A9 பிரதான வீதியில் இடம் பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சயிக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கணவன் மனைவி இருவரும் ஆலயத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த போதே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே