IPL - இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

#IPL #T20 #Cricket #Chennai #Gujarat #2024
Prasu
2 years ago
IPL - இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

ஐபிஎல் தொடரின் இன்றைய 7-வது லீக் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துபே 51, ரச்சின், ருதுராஜ் ஆகியோர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான கில் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக சாய் சுதர்சன் இறங்கினார். 

சாஹா மற்றும் சுதர்சன் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாஹாவுக்கு பவுன்சர் பந்தை வீசி தலையில் அடிபட வைத்த தீபக் சாஹர் அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டை வீழ்த்தினார். 

அடுத்து வந்த விஜய் சங்கர் 12, மில்லர் 21 ரன்னில் நடையைக் கட்டினர். பொறுப்புடன் விளையாடிய சாய் சுதர்சன் 37 ரன்னில் அவுட் ஆனார். 

இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. இதனால் 63 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி பெற்றது. சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4