இங்கிலாந்தில் மனைவியை கொடூர கொலை செய்த கணவர்

#Arrest #Murder #wife #England #Knife
Prasu
1 year ago
இங்கிலாந்தில் மனைவியை கொடூர கொலை செய்த கணவர்

இங்கிலாந்து லிங்கன்னஷயர் பகுதியை சேர்ந்தவர் நிக்கோலஸ் மெட்சன். இவரது மனைவி ஹோலி பிராம்லி (வயது26). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. 

இதற்கிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று நிக்கோலஸ் மெட்சன் ஆத்திரத்தில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது உடலை 200-க்கும் மேற்பட்ட துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் வைத்துள்ளார். 

அதை சமையல் அறையில் உள்ள குளிர் சாதன பெட்டியில் வைத்துள்ளார். பின்னர் மனைவியின் உடல் பாகங்கள் இருந்த பிளாஸ்டிக் பைகளை ஆற்றில் வீசியுள்ளார். இதற்கு அவரது நண்பன் ஒருவர் உதவியுள்ளார்.

ஆற்றில் மிதந்த ஹோலி பிராம்லியின் தலை மற்றும் உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் நிக்கோலஸ் மெட்சனை கைது செய்தனர். 

அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இச்சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!