சித்திரைப் புத்தாண்டு – 2024 சுபநேரங்கள் – (வாக்கிய பஞ்சாங்கம்)
* புது வருடப் பிறப்பு– 13.04.2024 சனிக்கிழமை இரவு 08 மணி 15 நிமிடத்தில் குரோதி வருடம் பிறக்கின்றது.
* விஷூ புண்ணியகாலம் _மருத்து நீர் வைக்கும் நேரம் 13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 04.15 முதல் நள்ளிரவு 12.15 வரை தலை – ஆலிலை, கால் – புங்கை இலை, திசை – வடக்கு
* கைவிஷேடம் பரிமாறும் நேரம்_ -14ஆம் திகதி காலை 07.57 முதல் காலை 09.56 வரை 14ஆம் திகதி காலை 09.59 முதல் நண்பகல் 12.01 வரை
* அணியும் ஆபரணங்கள்_ – நீலக்கல் பதித்த அல்லது வைரக்கல் பதித்த ஆபரணங்கள்.
* அணியும் ஆடைகள்_- கபிலம் அல்லது வெள்ளை நிறம் கொண்டஆடைகள்
* சங்கிரமதோஷ நட்சத்திரங்கள் – மிருகசீரிடம்,திருவாதிரை, புனர்புசம் (01ஆம், 02ஆம் பாதங்கள்), சித்திரை, விசாகம் (04 ஆம் பாதம்), அனுஷம், கேட்டை, அவிட்டம்
* வியாபாரம், புதுக் கணக்கு ஆரம்பித்தல்_15.04.2024 திங்கட்கிழமை காலை 09.08 தொடக்கம் காலை 09.51 வரை. அதே நாள் காலை 09.55 தொடக்கம் காலை 10.31 வரை.