சுவிஸ் ஜோதிடர் சுதாகரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்மடுநகர் கிராமிய சித்த மருத்துவமனையில் இடம்பெற்ற நிகழ்வு
சுவிஸ் ஜோதிடர் சுதாகரின் பிறந்தநாளை முன்னிட்டு கல்மடு நகரில் உள்ள கிராமிய சித்த மருத்துவமனை வளாகத்தில் இன்று மிக முக்கியமான 148 மூலிகை மரங்கள் நடுகை செய்து அங்கே இருக்கின்ற பிள்ளையாருக்கும் சிறப்பு பொங்கல் பூஜையும் இடம்பெற்றது. மேலும், இன்னும் 50க்கும் மேற்பட்ட மரங்கள் அடுத்த வாரம் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதை ஒழுங்கு செய்த சித்த வைத்தியசாலை நிர்வாக அதிகாரி வைத்தியர் திரு. மனோராஜ் அவர்களுக்கும், இந்நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் சிறப்பாகத் திருவையாறு மகா வித்தியாலயத்தின் பாடசாலை அதிபர் திரு. விக்னராஜா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன் என்று சுவிஸ் ஜோதிடர் சுதாகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நடுகை செய்த சில மூலிகைகள் தாண்டி, அத்தி, காட்டு அத்தி, கடுக்காய், ஏழிலை பாவை, இலுப்பை, இன்னும் பல மூலிகை மரங்கள்.







சித்தர் சோதிட நிலையம் சூறிச் www.cittarastro.ch
(வீடியோ இங்கே )