ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல்!
#SriLanka
#Australia
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
7 months ago
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள தேவாலயத்தில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் பாதிரியார் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியுள்ளார்.
இந்த நிகழ்வு தேவாலயத்தின் சமூக ஊடகங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டது.
தாக்குதல் தாரியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.