IPL - பஞ்சாப் அணி தோல்வி

#IPL #T20 #Cricket #Gujarat #Punjab
Prasu
2 years ago
IPL - பஞ்சாப் அணி தோல்வி

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான சாம் கரண் - பிரப்சிம்ரன் சிங் ஒரளவு நல்ல தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் ஆட்டமிழந்த பின் அணியின் நிலைமை தலைகீழ் ஆனது. குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர்.

அதிலும் குறிப்பாக குஜராத அணி வீரர் சாய் கிஷோர் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் வீழ்த்தினார். கடைசி கட்டத்தில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ஹர்பிரித் பாட்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடிம் அணியை கவுரமான ரன்களை எட்ட உதவினார். 

இதில் பிரார் 12 பந்துகளில் 29 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் 20 ஓவர்களில் 142 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கடைசி பந்தில் பாட்டியா ரன் அவுட் ஆனார். 

அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35 ரன்கள் அடித்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பின்னர் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சகா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 

இந்த ஜோடியில் சகா 13 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து நிதானமாக ஆடிய சுப்மன் கில் 35 ரன்களும், அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் 4 ரன்களும், ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய சாய் சுதர்ஷன் 31 ரன்களும், ஓமர்சாய் 13 ரன்களும், ஷாரூக்கான் 8 ரன்களும், ரஷித் கான் 3 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

முடிவில் தேவாட்டியா 36 (18) ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து146 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளும், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4