இஸ்ரேல் முற்றிலும் அழிக்கப்படும் : ஈரான் அதிபர் எச்சரிக்கை!
ஈரான் மீது இஸ்ரேல் பெரிய அளவில் தாக்குதல் நடத்தினால், பாதுகாப்புப் பாத்திரம் கணிசமாக மாறி, இஸ்ரேல் முற்றிலும் அழிக்கப்படும் என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் இஸ்ரேலின் சியோனிச ஆட்சிக்கு எதுவும் எஞ்சாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தலைவர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்ததாக ஈரானின் IRAN (Irna) அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை முதல் பாகிஸ்தானுக்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஈரான் ஜனாதிபதி, இரு நாடுகளுக்கும் இடையிலான வருடாந்த இருதரப்பு வர்த்தகத்தை 10 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கும் உறுதியளித்துள்ளார்.
இருப்பினும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என்று அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஜனாதிபதி ரைசியின் பாகிஸ்தான் விஜயத்தின் போது 08 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
பாகிஸ்தான் விஜயத்தை முடித்துக் கொண்டு ஈரான் ஜனாதிபதி இன்று இலங்கை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.