சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன்!
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் தற்போது சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
சீன உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் பல முக்கிய விடயங்கள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெய்ஜிங்கில் இன்று (26.04) சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சீனாவும் அமெரிக்காவும் "ஸ்திரத்தன்மை மற்றும் சரிவு" இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்ய வாய்ப்பு உள்ளது என்று வாங் யி கூறினார்.
ஒரு வருடத்தில் பிளிங்கனின் இரண்டாவது சீனா விஜயம் இதுவாகும். பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரஷ்யாவுக்கு சீனாவின் ஆதரவு, தென்சீனக் கடலில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்குரிய சூழல்கள், தைவானுக்கு எதிராக எழுப்பப்படும் ஆக்கிரமிப்பு ஆகியவை அவற்றில் முதன்மையான பிரச்னைகளாகும்.