பிரேசிலில் முகாமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் தீ விபத்து - 10 பேர் பலி
தெற்கு பிரேசிலில் உள்ள போர்டோ அலெக்ரே நகரில் பயன்பாடு இல்லாமல், வீடு இல்லாதோருக்கு முகாமாக செயல்பட்டு வந்த ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்டுள்ளது. தீயில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், தீ விபத்துக்கான காரணத்தை விசாரிக்கவும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, மாநில ஆளுநர் எடுவார்டோ லைட், ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேயர் செபாஸ்டியாவோ மெலோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.