மாநாட்டிற்காக சவுதி புறப்படும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் சவுதி அரேபியாவில் நடைபெறும் உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக நாளை மறுதினம் சவுதி புறப்படுகிறார்.
உலக பொருளாதார மாநாட்டின் உலகளாவிய ஒத்துழைப்பு, வளர்ச்சி மற்றும் எனர்ஜி தொடர்பான சிறப்பு ஆலோசனை கூட்டம் 28 மற்றும் 29-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஷெபாஸ் ஷெரீப் உடன் வெளியுறவுத்துறை மந்திரி இஷாக் தார் செல்கிறார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழைப்பின் பேரில் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொள்கிறார். ரியாத்தில் இந்த உலக பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது.
இதில் கலந்து கொள்ள இருக்கும் ஷெபாஸ் ஷெரீப் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கிறார்.
சவுதி பட்டத்து இளவரசர் உடன் தனிப்பட்ட முறையில் ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் சவுதி முதலீடு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இரு நாடுகளும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.