இறந்த பெண்ணின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட பாலஸ்தீனிய சிசு மரணம்
இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே தாயின் வயிற்றில் இருந்து அவசர சிசேரியன் மூலம் மீட்கப்பட்ட பாலஸ்தீனிய சிசு இறந்துவிட்டதாக உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைக்கு ரூஹ் என்று பெயரிடப்பட்டது, அதாவது ஆத்மா. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவக் குழுவினரால் அவரைக் காப்பாற்ற முடியாமல் வியாழக்கிழமை காசா மருத்துவமனையில் உயிரிழந்ததாக ரமி அல்-ஷேக் கூறியுள்ளார்.
தெற்கு காசா நகரமான ரஃபாவில் உள்ள குழந்தையின் வீடு சனிக்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் தாக்கப்பட்டது. அவரது பெற்றோர் மற்றும் 4 வயது சகோதரி அனைவரும் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைக்கு சுவாச பிரச்சனைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளது என்று ரூஹை கவனித்து வந்த எமிராட்டி மருத்துவமனையின் அவசர பிறந்த குழந்தை பிரிவின் தலைவர் டாக்டர் முகமது சலாமா கூறினார்.
“நானும் மற்ற மருத்துவர்களும் அவளைக் காப்பாற்ற முயன்றோம், ஆனால் அவள் இறந்துவிட்டாள். தனிப்பட்ட முறையில் எனக்கு, இது மிகவும் கடினமான மற்றும் வேதனையான நாள்,” என்று அவர் தொலைபேசியில் கூறியுள்ளார்.
“அவளுடைய சுவாச அமைப்பு முதிர்ச்சியடையாதபோது அவள் பிறந்தாள், அவளுடைய நோயெதிர்ப்பு அமைப்பு மிகவும் பலவீனமாக இருந்தது, அதுவே அவளுடைய மரணத்திற்கு வழிவகுத்தது.அவள் தியாகியாக தன் குடும்பத்தைச் சேர்ந்தாள்” என்று சலாமா கூறினார்.