டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது அவமதிப்பு வழக்கு சுமத்தப்பட்டுள்ளதுடன், அபராதம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை மீறும் பட்சத்தில் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாட்சிகள், நீதிபதிகள் அல்லது நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்களை பகிரங்கமாக தாக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறியமைக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ட்ரம்ப் 1000 டொலர் அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறாக அவர் ஒன்பது வழக்குகளுக்கு அபாராதம் செலுத்த வேண்டும். மொத்தமாக 9000 டொலர் செலுத்த வேண்டும்.
இந்த உத்தரவை மீறும் பட்சத்தில் முன்னாள் ஜனாதிபதி சிறைக்கு அனுப்பப்படலாம் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆபாச நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்துவதற்காக வணிக பதிவுகளை பொய்யாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ட்ரம்ப் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.