ஹைட்டியில் நிலவும் மோசமான வானிலை - 13 பேர் உயிரிழப்பு!
வடக்கு ஹைட்டியில் இரண்டு நாட்களாக பெய்த கனமழையைத் தொடர்ந்து குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹைட்டியின் சிவில் பாதுகாப்பு முகமையின் அறிக்கையின்படி, பெரும்பாலான இறப்புகள் கடலோர நகரமான கேப்-ஹைடியனின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2,200 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, மேலும் ஹாட்-கேப் நதியால் அடித்துச் செல்லப்பட்ட கால்நடைகளில் குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வரும் நாட்களில் கூடுதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வடக்கு ஹைட்டி முழுவதும் சாலைகளை பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.
அண்டை நாடான புவேர்ட்டோ ரிக்கோவிலும் கனமழை பதிவாகியுள்ளது, சான் ஜுவானின் தலைநகரில் தரையிறங்க திட்டமிடப்பட்ட குறைந்தது ஒரு டஜன் விமானங்கள் டொமினிகன் குடியரசு மற்றும் பிற இடங்களுக்கு மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளார்.