இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு

#Women #Space #astronaut #Indian #cancelled
Prasu
6 months ago
இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58). இவர் கடந்த 1998-ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவில் இணைந்தார்.

இதனையடுத்து அங்கு விண்வெளிக்கு சென்று பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டுள்ளார். அதன்படி இவரது முதல் பயணம் 2006-ம் ஆண்டிலும், 2-வது விண்வெளிப் பயணம் 2012-ம் ஆண்டிலும் வெற்றிகரமாக அமைந்தது.

இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக மீண்டும் அவர் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருந்தார். இவருடன் ஸ்டார்லைனர் வில்லியம்ஸ் (58), புல்ச் வில்மோர் ஆகியோரும் செல்ல இருந்தனர்.

இதற்காக அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கனாவெரலில் உள்ள விண்வெளி ஏவுதளத்தில் இருந்து போயிங் ஸ்டார்லைனர் நிறுவனத்துக்கு சொந்தமான விண்கலம் அனுப்பப்பட இருந்தது.

இந்த நிலையில், இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புல்ச் வில்மோர் ஆகியோர் பூமியில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் பயணம் திடிடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 கடைசி நேரத்தில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!