மாலத்தீவில் இருந்து அனைத்து ராணுவ வீரர்களையும் திரும்ப பெற்ற இந்தியா

#India #government #Maldives #Soldiers
Prasu
1 week ago
மாலத்தீவில் இருந்து அனைத்து ராணுவ வீரர்களையும் திரும்ப பெற்ற இந்தியா

மாலத்தீவில் நடைபெற்ற தேர்தலில் முகமது முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர். 

தேர்தல் பிரசாரத்தின்போது மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள், திருப்பி அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்றபின், அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கினார். 

இருநாட்டு அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் ராணுவ வீரர்களை திரும்பப்பெற இந்தியா ஒப்புக்கொண்டது. மே 10-ந்தேதிக்குள் படிப்படியாக அனைத்து வீரர்களையும் திரும்பப்பெற இந்தியா சம்மதம் தெரிவித்தது.

அதன்படி கடந்த மார்ச் முதல்கட்டமாக சில வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றது. ஏப்பரல் மாதம் 2-வது கட்டமாக ஏப்ரல் மாதம் சில வீரர்களை திரும்பப்பெற்றது.

2 கட்டங்களாக 51 வீரர்களை திரும்பப்பெற்றது. இந்த நிலையில் இன்றோடு அனைத்து வீரர்களையும் இந்தியா திரும்பப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்தியா ராணுவ வீரர்களை திரும்பப்பெற மே 10-ந்தேதி (இன்று) கடைசி நாளாகும். இந்த நிலையில் வீரர்களை இந்தியா திரும்பப் பெற்றுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 90 ராணுவ வீரர்கள் மூன்று ராணுவ தளங்களில் பணியாற்றி வந்தனர்.